அஜித் பிரியாணி போடுவார்.! விஜய் என்ன செய்வார் பாருங்க.! நேரில் சந்தித்த பிரபலம்.!

0
243

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் முக்கிய நடிகர்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றனர். இதில் அல்டிமேட் ஸ்டார் அஜித் பல முறை படப்பிடிப்பில் பிரியாணி செய்து போட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அஜித்தை போல நடிகர் விஜயும் தன்னை சந்திக்க வந்தவருக்கு தன் கையாலேயே பரிமாறியுள்ளாராம். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் படம் வெளியாகும் போதும் சரி அதற்கு முன்பும் சரி திரையரங்க உரிமையாளர்களை சந்திப்பது வழக்கம்.

இதையும் படியுங்க : விஜய் 63 படத்தில் விஜய்யின் பெயர் இது தான்.! வெளியான புதிய தகவல்.! 

Read more at:

அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல வெற்றி திரையரங்க உரிமையாளரை தனது வீட்டில் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பின் போது நடந்த சுவாரசியமான தகவலை வெற்றி திரையரங்க உரிமையாளர் பகிர்ந்து கொள்கையில், என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டார். நான் கிரீன் டீ என்று சொன்னேன். தானே கப் எடுத்து வந்து, அவர் கையாலேயே கிரீன் டீ கலந்து எனக்கு கொடுத்தார்.

அதே போல விஜய் 63 படம் குறித்து பேசுகையில், தளபதி 63 ஒரு கலர்ஃபுல்லான படம், இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் விரும்புவார்கள். நான் நடித்த கடைசி படங்கள் எல்லாம் கொஞ்சம் சீரியசாக போயிடுச்சு. அதுவும் எல்லா படத்துலயும் இந்த பிரஸ் முன்னாடி பேசறதெல்லாம் எனக்கு மிகவும் போர் அடித்து போயிடுச்சு’ என்று கூறினாராம் விஜய்.