சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரபட்டாளங்களும் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியளராக நடிக்கிறார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.
அதே போல விஜய்யின் சமீபத்திய புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ‘மைக்கல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.