மழை வெள்ளத்தோடு விஷமிகள் செய்த செயல் – ஸ்பாட்டுக்கு சென்ற VMI நபர்கள் – பாராட்டிய மோகன் ஜி.

0
412
- Advertisement -

மழை வெள்ளத்தோடு கழிவுகளை கலந்த விஷமிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டுபிடித்து இருக்கும் வீடியோவை பகிர்ந்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், மழை நின்ற போதிலும் பல்வேரு பகுதிகளில் தண்ணீர் இன்னமும் தேங்கி இருக்கிறது. இதனால் மக்கள் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அரசு தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சென்னை மழை வெள்ளம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.  இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.#கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து ஏற்கனவே செய்து கொண்டிருந்த களப்பணியை மேலும் தீவிரயமாக செய்து வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இப்படி ஒரு நிலையில் எண்ணூர் cpcl அருகே மழை வெள்ளத்தோடு கழிவுகளை கலந்த விஷமிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த இயக்குனர் மோகன் ‘எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு..என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சென்னையில் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கி இருந்தனர். மேலும், சென்னையைப் போலவே இந்தப் புயல் காரணமாகச் செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேரடியாக புஸ்ஸி ஆனந்த் நிவாரணம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement