இயக்க நிர்வாகிகளை கடுமையாக புஸ்ஸி ஆனந்த் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
#Vijay Fan meet pic.twitter.com/qh925xu550
— Senthilraja R (@SenthilraajaR) July 11, 2023
இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கம்:
அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
#JUSTIN | இயக்க நிர்வாகிகளை கடுமையாக திட்டிய புஸ்ஸி ஆனந்த்.! #BussyAnand #Vijay #vijaymakkaliyakkam #newstamil24x7 pic.twitter.com/KVViw5vwrZ
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) July 11, 2023
விஜய் நடத்திய விழா:
மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. இன்னொரு பக்கம் விஜய் பிஸியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
விஜய் அரசியல்:
இன்னும் சில மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. அதற்கு பிறகு விஜய் அவர்கள் படங்களிலிருந்து ஓய்வு எடுப்பதாகவும் மூன்று ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை… திடீரென நிர்வாகியை கோபமாக திட்டிய புஸ்ஸி ஆனந்த்…#Chennai | #Panaiyur | #ActorVijay | #VijayFans | #BussyAnand pic.twitter.com/KpVF7ZpuYw
— Arooon (@Arunak2207) July 11, 2023
கடுமையாக பேசிய புஸ்ஸி ஆனந்த்:
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஷி ஆனந்த் இயக்க நிர்வாகிகளை கடுமையாக திட்டி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது தகவல் வெளியாகிருக்கின்றது. அப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஷி ஆனந்த் அவர்கள் இயக்க நிர்வாகிகளை கடுமையாக திட்டி பேசி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னே இப்படி தான் மக்களிடம் நடந்து கொள்வதா? என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.