கபடி சீன் என்பதால் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற கில்லி பட மியூசிக் – தெறிக்கவிட்டுள்ள அனிருத்.

0
3996
master

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை (ஜனவரி 11) வெளியாக இருக்கும் நிலையில் மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை தீபாவளி பண்டிகை அன்று OTT தளத்தில் வெளியிட்டு விட்டார். ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவாது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர்.

இருப்பினும் இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் படம் வெளியாகாது என்றும் கூறப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி அதவாது நாளை இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் 50 % மட்டும் தான் பார்வையாளர்களுக்கு அனுமதி என்பதால் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் நேற்று (ஜனவரி 11) சமூக வலைதளத்தில் வெளியானது. இதனால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மாஸ்டர் திரைப்படத்தின் லீக்கான வீடீயோவை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என்று படக்குழுவினரும், பல்வேறு நடிகர் நடிகைளும் கூறி வந்தனர். மேலும், அந்த வீடீயோவை வெளியிட்ட நபரையும் போலீசார் கைது செய்தனர்.

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துகொண்டு இருந்தனர். ஆனால், ட்ரைலரை வெளியிடாமல் இருந்த மாஸ்டர் படக்குழு தினமும் ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிங்கர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று விஜய்யின் ஆக்ஷன் பிளாக்கில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது தான் படத்தின் கடைசி ப்ரோமோ என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement