நடிகர் விஜய் தன்னுடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை போட்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் உச்சத்திலிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவராக தளபதி விஜய் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் என்றாலே தாறுமாறு தான். இவருடைய படம் என்றாலே திரையரங்களில் திருவிழா போன்று ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

இதனிடையே தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் விஜய் கூட தன் தந்தை மீது போலீஸ் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தான் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்தலில் 169 பேர்கள் போட்டியிட்டார்கள். நடந்து முடிந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 77 பேர் வெற்றி பெற்றார்கள். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பீதியை கிளப்பி உள்ளது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்று பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

Advertisement

இந்த நிலையில் விஜய் அவர்கள் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கூறியது, உள்ளாட்சி தேர்தல் மூலம் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். அடுத்து வரப்போகும் தேர்தலிலும் விஜய் பச்சைக் கொடி காட்டுவார். இன்றைய காலகட்டத்தில் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரக் கூடாது. ஏனென்றால் தமிழக மக்கள் அவரை உச்சத்தில் வைத்துள்ளார்கள். அதனை அவர் சிறிது காலம் அனுபவிக்கட்டும். நான் அரசியலில் சிறு பாதை போட்டு கொடுத்து இருக்கிறேன். அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாட்டிக்கொண்டார். எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. எதிர்காலத்தில் விஜய் என்னை விட மிக வேகமாக அரசியல் குறித்து முடிவு எடுப்பார்.

கடந்த ஆட்சியில் விஜய் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போதைய ஆட்சி பழிவாங்கும் ஆட்சி இல்லை. சமீபத்தில்கூட விஜய் என்னை அழைத்து ஒரு மணி நேரம் பேசினார். அப்போது அவர் சில பொதுவான விஷயங்களை செய்ய வேண்டும் என்று சொன்னார் என்று எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சூசகமாக பல விஷயங்களை கூறியிருந்தார். இதனை அடுத்து நெட்டிசன்கள் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளம் ஆக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்குமோ என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement
Advertisement