விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நாசர் மகன்..!விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்..!

0
671
Nasarsonfaizal

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் நாசர். இவருக்கு பைசல், லுத்புதீன், மெஹ்திஹாசன் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகனான பைசல் கடந்த 2014 ஆம் ஆண்டு கோரமான விபத்தில் சிக்கினார்.

Vijay-Nasser Son

அந்த விபத்தில் பைசலுடன் பயணித்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பைசல் மட்டும் மண்டையில் கடுமையாக காயத்துடன் மருத்துவமணையில் அனுமதிக்கபட்டார். நீண்ட நீள சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்த பைசல் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாசரின் மகன் பைசல் தீவிரமான விஜய் ரசிகரும் கூட, தனது காரின் பின்பகுதியில் கூட விஜய் நடித்த மெர்சல் பெயரைத்தான் ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார். பைசல் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த போது நடிகர் விஜய் அவ்வப்போது நாசர் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து வருவதும் வழக்கம்.

https://twitter.com/nasser_kameela/status/1068915930820861952nasar son

இந்நிலையில் பைசல் சமீபத்தில் தனது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 1)கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்தியதோடு பைசலின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.