100 சதவீதம் குடுங்க ஐயா – முதலமைச்சரை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை.

0
815
Vijay
- Advertisement -

மாஸ்டர் படம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தளபதிவிஜய் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் மாநகரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் மகேந்திரன் சாந்தனு சஞ்சீவ் ஸ்ரீமன் ஸ்ரீநாத் என்று எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போதும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில் கருணா பிரச்சினை காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீடு தடைபட்டு போனது.

-விளம்பரம்-

மேலும் இந்த திரைப்படம் ஓட்டி டியில் வெளியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை Ott யில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் டம் நடிகர் விஜய் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது

நடிகர் விஜய் நேற்று(டிசம்பர் 27) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். அப்போது திரையரங்குகளில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை, 100 சதவீதமாக மாற்ற வேண்டி அவர் கோரிக்கை வைத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் இந்த சந்திப்பில் அமைச்சர் வேலுமணியும் உடன் இருந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement