‘அப்பா கூட தான் பேசறது இல்ல, ஆனா அம்மா’ – சமீபத்தில் தன் அம்மாவை சந்தித்துள்ள விஜய். வைரல் புகைப்படம்.

0
272
vijay
- Advertisement -

மீண்டும் விஜய் தன் பெற்றோர் உடன் சேர்ந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறும். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விஜய் – தந்தை சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு:

இப்படி இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய குடும்பம் வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. தளபதி விஜய்க்கு அவருடைய பெற்றோருக்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜய் அரசியலுக்கு வருவதாக சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அவருடைய தந்தையும் நடிகரும் இயக்குனருமான சந்திரசேகர் கூறியதை அடுத்து விஜய் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போதிலிருந்து விஜய்க்கும் எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

விஜய்- பெற்றோர்கள் பிரச்சனை:

இதனால் சில ஆண்டுகள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை என்றும் கூறப்பட்டது. அதிலும் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற தொடர்பாக நபர்கள் போட்டியிடுவதற்கு விஜய் கண்டித்து போட்டியிட்ட நபர்கள் மீதும் தன் தாய், தந்தை மீதும் புகார் அளித்திருந்தார். இது அப்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் விஜய் வீட்டிற்கு வருவதில்லை என்றும் விஜயுடன் பேசுவதில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

-விளம்பரம்-

விஜய்- தாய் சோபா லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் விஜய் தன் தாயார் சோபாவை சந்தித்த போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே பெற்றோர்களை சந்திக்கவே இல்லை, பேசவே இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் விஜய் தன் தாயார் சோபாவை சந்தித்து இருக்கிறார். அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் விஜய் தன்னுடைய லேட்டஸ்ட் கெட்டப் உடன் தாயாருடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பயங்கர வைரலாகி வருகின்றனர்.

‘தளபதி 66’ படம் தகவல்:

மேலும், பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement