‘மிஷன் இம்பாசிபிள்’ மாதிரி ஒரு படம். ‘நீங்க எப்போ சொன்னாலும் பண்ணிடலாம் சார்னு விஜய் சொன்னார், அதுக்குள்ள அவர் இறந்துட்டார். யார் தெரியுமா ?

0
8905
Vijay
- Advertisement -

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் தான் ஒளிப்பதிவாளர் ஜீவா(44). இவர் மலையாளப் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர். தமிழில் அக்னி நட்சத்திரம், தேவர் மகன், ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் இவர் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார். பின்னர் காதலன் படம் மூலம் ஒளிப்பதிவாளரானார். அதன் பின்னர் இயக்குநர் ஷங்கரின் பெரும்பலான படங்களுக்கு ஜீவாதான் கேமராமேனாக இருந்துள்ளார். ஒளிப்பதிவாளராக விளங்கி வந்த ஜீவா பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். 12பி, உள்ளம் கேட்கமே, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களை ஜீவா இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-
ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவா

மேலும், ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ரஷ்யாவில் நடந்து வந்தது. இந்த நிலையில் ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஜீவா பரிதாபமாக இறந்தார். ஜீவா இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 40 விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். இந்தியில் 10 படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் இவர் காதலன், இந்தியன், ஜென்டில்மேன், வாலி, குஷி ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

இதையும் பாருங்க : திடிரென்று ரசிகருக்கு கிஸ் கொடுத்த அமலா பால். அப்படி என்ன அவர் சொன்னார்னு பாருங்களே. வீடியோ இதோ.

- Advertisement -

இந்நிலையில் ஜீவா மரணம் குறித்து தளபதி விஜய் கூறியது நடிகர் ஸ்ரீநாத் சமீபத்தில் பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, விஜய் ரொம்பவே ஃபீல் பண்ணார். ஜீவா உடல் ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு வறுவதற்க்கு முன்னாடியே விஜய் அவர்கள் ஜீவா சாரோட வீட்டுக்கு வந்திட்டார். எல்லா சடங்கும் முடியுற வரைக்கும் அங்கேயே இருந்தார். விஜய் எந்த இடத்துலேயும் அவ்வளவு நேரம் இருந்து நான் பார்த்ததேயில்லை. ஜீவா சாரோட மரணம் விஜய்யை ரொம்பவே பாதித்தது. கடைசி வரைக்கும் இருந்து ஜீவா சாரோட மனைவிக்கு ஆறுதல் சொல்லிட்டுத் தான் விஜய் கிளம்பினார்.

விஜய், ஸ்ரீநாத்

ஜீவா சாருக்கும் விஜய்யை ரொம்பப் பிடிக்கும். ’தாம் தூம்’ படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ப்ளான் போட்டு இருந்தார் ஜீவா. அந்தக் கதை ’மிஷன் இம்பாசிபிள்’ படத்தோட பேட்டனில் இருக்கும். இதை விஜய்கிட்டேயும் ஜீவா சார் சொல்லியிருந்தார். விஜய்யும், ‘நீங்க எப்போ சொன்னாலும் பண்ணிடலாம் சார் என்று சொன்னார். ஆனால், அது நடக்காமலேயே போய் விட்டது. இப்போ கூட நானும் விஜய்யும் மீட் பண்ணும்போது எப்படியாவது ஜீவா சாரைப் பற்றிய பேச்சு வந்துவிடும். அதற்கு அவரோட இடம் இன்னும் காலியாதான் இருக்கு என்று விஜய் சொல்லுவார் என்று உருக்கமான பதிலை கூறினார்.

-விளம்பரம்-
Advertisement