நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா.! ஏன்? எங்கு? வைரலாகும் புகைப்படம்.!

0
860
Vijay-Mom-Shoba

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கூறப்படும் விஜய்யின் அம்மா சோபா, தமிழ் சினிமாவின் தற்போதய சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சஞ்சய் இல்ல திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தாயாரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகரும் கலந்துக்கொண்டார்.

- Advertisement -

பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமண விழாவில், ரஜினியும் தனது மனைவியுடன் வந்துள்ளார். ஷோபா மற்றும் ரஜினி சந்தித்து ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், இந்த படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement