சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு தன் விமர்சனத்தை விஜய்யிடம் சொன்னதாக விஜய்யின் அம்மா ஷோபா கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பொதுவாகி ஒரு ஹிட் படம் கொடுத்தால் அடுத்த படம் பிளாப் ஆகிவிடும் என்பது தான் விஜய்யின் சமீப கால ராசியாக இருந்து வருகிறது. மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் விஜய். இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.
பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்ப்படுத்தி இருந்தது. படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்தது, மிகவும் மோசமான கதை, மோசமான காமடி காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாலை சுற்றியே இந்த படம் நடந்ததால் இந்த படத்தின் திரைக்கதையும் படு மோசமாக போனது.
பீஸ்ட் நடிகர் உட்பட கலாய்க்கப்பட்ட பீஸ்ட் :
பீஸ்ட் படம் வெளியான முதல் நாளே இந்த படத்தை பலரும் கேலி செய்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் Jet ஒட்டிய காட்சிகளை உண்மையான Jet வீரர்கள் காலய்த்து தள்ளியதால் இந்த படம் இந்திய அளவில் Troll படமாக அமைந்து இருந்தது. சமீபத்தில் இந்த படத்தில் நல்ல வில்லனாக நடித்த மலையாள நடிகர் Shine Tom Chacko இந்த படத்தை கலாய்த்து இருந்தார்.
பீஸ்ட் குறித்து ஷோபா :
இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு விஜய்யின் அம்மா ஷோபா விஜய்யிடம் தன் விமர்சனத்தை கூறியுள்ளார்.. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர் ‘ஆன அனைத்து விஜய் படத்தையும் முதல் நாளே சத்யம் திரையரங்கில் தான் பார்ப்பேன் ஒரு ரசிக்கத்தான் அந்த படத்தை நான் பார்த்தேன் ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியாகும் போது அவருக்கு கால் செய்து என்னுடைய விமர்சனத்தை கூறுவேன்.
விஜய் சொன்ன பதில் :
என்னால் மறக்க முடியாத படம் என்றால் அது துப்பாக்கி படம் தான். அந்த படத்தை மறக்கவே முடியாது. எப்போதெல்லாம் அந்த படம் டிவியில் போட்டாலும் வீட்டில் இருக்கும் ஹோம் தியேட்டரில் பார்த்தேன் படத்தை பார்த்துவிட்டுவேன். பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு விஜய்க்கு கால் செய்து படம் என்டர்டென்மென்டா இருக்குமா அதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று சொன்னேன். அதற்கு விஜய் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது என்று சொன்னார்.
பீஸ்ட் குறித்து எஸ் ஏ சி :
அவருக்கு படம் வெளியான இரண்டு மூன்று நாட்களிலேயே அதனுடைய ரிசல்ட் தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார் ஷோபா. ஏற்கனவே பீஸ்ட் படம் குறித்து பேசிய விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ‘இந்த படத்தில் இசையமையாளர் இருக்கார், டான்ஸ் மாஸ்டர் இருக்கார், எடிட்டர் இருக்கார் ஆனால், டைரக்ட்டர் தான் இல்லை. பீஸ்ட் படத்தில் கடத்தப்பட்டவர்கள், தீவிரவாதிகள் என எந்த ஒரு விஷயத்திலும் பயம் வரவில்லை. இதற்கு காரணம் படத்தின் மோசமான திரைக்கதை’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.