வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஏன் அப்படி செய்தார் – உண்மையை உடைத்து விளக்கம் கொடுத்த சோபா

0
782
Shoba
- Advertisement -

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன் தாய் தந்தையை கண்டதும் விஜய் செய்த செயல் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு தற்போது விஜயின் தாய் சோபா விளக்கம் அளித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

-விளம்பரம்-

இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருந்தது . மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தது . வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாக பல பிரச்சனைகள் இருந்தது. இதை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் குறைவான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதோடு அஜித்தின் துணிவு படமும் வெளியாகி இருந்தது. பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான்.

- Advertisement -

விஜய் பட பிரச்சனை:

அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுத்து விடுவார் விஜய். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருந்தது. இதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.

விஜய்-எஸ் ஏ சி இடையே தகராறு:

வழக்கம் போல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சி மற்றும் அவரது தாயார் சோபாவும் வந்து இருந்தனர். ஆனால், விஜய் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்று பல வதந்திகள் சோசியல் மீடியாவில் எழுந்தது. சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

இசை வெளியீட்டு விழாவில் விஜய் செய்தது:

விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார். இதனால் அவரிடம் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார் என்றும், இருவருமே சுத்தமாக பேசிக் கொள்வதே இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதற்கேற்ப சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். தற்போது வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தன் பெற்றோர்களை கவனிக்கவில்லை என்று கூறி புது சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள்.

சோபா கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து விஜயின் தாய் சோபா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாங்கள் சிறப்பு விருந்தினராக தான் சென்றிருந்தோம். அங்கு விஜய் ரசிகர்களை கவனிப்பது தான் வேலையே தவிர எங்களை இல்லை. அதனால் நாங்கள் எல்லோருடனும் ஒன்றாக இருந்தோம். நாங்கள் வீட்டில் தினமும் பேசி கொள்கிறோம், பார்க்கிறோம். அதனால் பொதுவெளியிலும் அவர் எங்களை கவனிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாங்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தான் சென்றோமே தவிர மற்றபடி செய்திகளில் வரும் தகவல்கள் எல்லாம் உண்மை அல்ல என்று கூறி இருக்கிறார்.

Advertisement