மகளுடன் நீச்சல் உடையில் போஸ் – இந்த வயதிலும் கிளாமரில் தூக்கல் காட்டிய விஜய் பட நடிகை.

0
7999
isha

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து இருப்பவர் தான் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் அகத்தியன் இயக்கிய ‘காதல் கவிதை’, அரவிந்த்சாமி உடன் நடித்த ‘என் சுவாச காற்றே’,கேப்டன் விஜய்காந்தின் ‘நரசிம்மா’, தளபதி விஜய்யின் ‘நெஞ்சினிலே’ உட்பட சில படங்களில் நடித்தவர். சில தமிழ் படங்களில் இஷா கோபிகர் நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், இவர் அதிகமாக ஹிந்தியில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும்,இஷா கோபிகர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான் ” படத்தில் நடிகை இஷா கோபிகர் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் இஷா கோபிகர். இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படம் ஆகும். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.

நடிகை இஷா கோபிகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் பிறந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தனது மகளுடன் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement