விஜயின் மெர்சல் படம் திரைக்கு வந்து இன்னும் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை பாக்ஸ் ஆபீசில் பாகுபலிக்கு அடுத்த இடத்தை குறைந்த நாட்களிலேயே பிடித்துவிட்டது.
பெரும்பாலும், ஹிந்தியில் வெளியாகாத விஜய் படங்கள் பொதுவாக டப்பிங் செய்யப்பட்டு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான யூடியூப் சேனலில் வெளியிடுவது வழக்கம். அப்படி வெளியிடப்படும் படங்களுக்கும் பெருத்த வரவேற்பு இருந்தது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் 20ஆவது நாளில் மெர்சல் படத்தின் மொத்த வசூல் இவ்ளோ கோடியா ?

Advertisement

அதே போல் தான் விஜயின் சினிமா வாழ்க்கையில் ப்லாப் படம் என்று கூறப்படும் ‘சுறா; ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த படமே யூடியூபில் 1.4 கோடி முறை பார்க்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் திடீரென இந்த படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதற்க்கு காரணம் தேடிப்பார்த்தால், இன்று (நவ்.10) சுறா ஹிந்தி டப்பிங் படம் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடுகிறது அதன் காரணமாக அந்த படத்தை யூடியூபில் இருந்து நீக்கியுள்ளனர். எனத் தெரியவந்துள்ளது.

Advertisement