சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்” படத்தில் தளபதி பட வில்லன் – யார் தெரியுமா?

0
311
- Advertisement -

ரஜினிகாந்த நடிக்கும் “ஜெயிலர்” படத்தில் தளபதி விஜய் நடித்த படத்தில் உள்ள வில்லன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது . கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வந்தன.

-விளம்பரம்-

ஆனால் கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான வம்சங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து நடிக்க இருக்கும் படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வரும் ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஜெயிலர் :

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கு “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார். மேலும் இடபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் இவருடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தில் விஜய் படத்தின் நடிகர் :

மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும் போதுதான் “ஜெயிலர்” படத்தில் விஜய் படத்தில் நடித்த மாஸ் வில்லன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் தான் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இந்த தகவலை அதிகார பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளது.

-விளம்பரம்-

ஜாக்கி ஷெராப் விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இவர் ஆயிரம் காண்டம் படத்தில் சிங்கப்பெருமாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அதோடு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்திலும் ரஜினிகாந்த நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement