விஜய்யின் நீலாங்கரை வீட்டை இந்த ஹாலிவுட் நடிகரின் வீட்டை பார்த்து தான் காட்டினாராம்.

0
34777
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் சினிமாவுக்குள் நுழைந்தார். தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வேற லெவல். விஜய் படம் என்றாலே திரையரங்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் விஜய். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், கடந்த 22 ஆம் தேதி தளபதி விஜயின் 46 வது பிறந்த நாள். இதை ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் புதுப்புது வித்தியாசமான போஸ்டர்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டை இடித்து பிரபல ஹாலிவுட் நடிகர் வீட்டை போலவே கட்டியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு சமயத்தில் நடிகர் விஜய் அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். அப்போது அவர் ஹாலிவுட் நடிகர் tom cruises வீட்டை பார்த்து விஜய் அவர்கள் வியந்து போய் விட்டார்.

- Advertisement -

அந்த வீட்டின் மீது உள்ள ஆர்வத்தால் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டை இடித்து அதே போல் பீச் ஹவுஸ் கட்டியுள்ளார். தன் குழந்தைகளுக்கு ஏற்றவாறு இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.
தற்போது அந்த வீட்டின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும்,நடிகர் விஜய் தான் தங்கிருந்த நீலாங்கரை வீட்டை இடித்து விட்டு பெரிதாக காட்டபோகிறார் என்று ஏற்கனவே சோசியல் மீடியாவில் கூறபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகள் ஷாஷாவிற்காக வீட்டின் உள்ளேயே பேட் மீண்டன் மைதானத்தை கூட அமைத்து வருகிறாராம் விஜய். தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதிகாக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement