தளபதி விஜய்யை வைத்து இயக்கப்போகிறாரா ரஞ்சித்.? பொது இடத்தில் அவரே சொன்ன தகவல்

0
330
vijay and ranjith
- Advertisement -

தமிழில் ஒரு கதாநாயகனை வைத்து “அட்டகத்தி” என்ற படத்தை இயக்கிய பா. ரஞ்சித் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா ” படத்தை இயக்கி வருகிறார். கபாலி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ரஜினியுடன் கைகோர்த்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகிந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pa. Ranjith

இயக்குனர் ஷங்கருக்கு பிறகு ரஜினியை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிவிட்டார் ரஞ்சித். காலா படத்திற்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் வைத்து படம் எடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அது இளைய தளபதி விஜயாக இருந்தால் எப்படி இருக்கும்.

- Advertisement -

இளையதளபதி விஜய் சில ஆண்டுகளாக கதைக்கு முக்கியதுவம் இருக்கும் கதாபாத்திரத்தில் தேர்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vijay

சமீபத்தில் காலா இசைவெளியிட்டு விழாவில் இயக்குனர் ரஞ்சித்திடம், நீங்கள் விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் ரஞ்சித் அந்த பத்திர்கையாளரிடம் “நீங்கள் தயரிப்பாளர் என்றால் எனக்கு ஓக்கே ” என்று கூறியுள்ளார்.

Advertisement