பேண்ட் எங்க ? கோவிலுக்கு இப்படி தான் போவீங்களா? ரம்யாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.

0
95912
vj-Ramya
- Advertisement -

சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறார்கள். 2014 ஆம் ஆண்டு சென்னை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ரம்யா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : சரியாக பேச முடியாது, கேட்க முடியாது. இருப்பினும் கணவரின் துணையோடு 1 கோடி பரிசை வென்ற மாற்றுத்திறனாளி பெண்.

- Advertisement -

திருமணத்திற்குப் பின்னர் இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்திருந்தார் ரம்யா. ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா. அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து தனது தொகுப்பாளர் பணியை செய்து வந்த ரம்யா, மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

தொகுப்பாளினி நடிகை என்பதை தாண்டி ரம்யாவிற்கு கடவுள் பக்தியும் கொஞ்சம் அதிகம் தான். இவர் அடிக்கடி திருப்பதி மலைக்கு நடந்தே சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கோவில் ஒன்றிற்கு சென்றிருந்த ரம்யா, சிட்டுக்குருவிகளை பிடித்து அதனிடம் தனது பிரார்த்தனைகளை கூறி வானில் விடும் ஒரு வித்யாசமான பிரார்த்தனையை செய்திருந்தார். ஆனால், அந்த வீடியோவில் ரம்யா ஒரு குட்டையான ஃப்ராக் அணிந்திருந்ததை கண்டு கடுப்பான ரசிகர்கள் கோவிலுக்கு இப்படித்தான் செல்வீர்களா? பேண்ட் எங்கே என்றெல்லாம் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement