எஸ் பி பியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய் – எக்ஸ்கிளுசீவ் வீடியோ இதோ.

0
1317
Vijay
- Advertisement -

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

பாடகர் எஸ் பி பாடகர் என்பதையும் தாண்டி. கேளடி கண்மணி, குனா, திருடா திருடா, காதலன், அவ்வை ஷண்முகி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். அதே போல விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘பிரியமானவளே’ படத்தில் கூட விஜய்யின் அப்பாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய், எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யை, நடிகர் மயில் சாமி அழைத்து செல்ல எஸ் பி பியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் பின்னர் எஸ் பி பியின் மகன் எஸ் பி சரணின் கையை பிடித்து தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். கொரோனா அச்சத்தையும் தாண்டி எஸ் பி பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், எஸ் பி பியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டில், ஏற்கெனவே அவரது முன்னோர்களும் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டில் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement