நான் சொல்ற மாதிரி பண்ணுங்க, தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் போட்ட கண்டிஷன் – நல்ல முடிவு தான்.

0
938
Vijay66
- Advertisement -

தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முடிவு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் பீஸ்ட் படம் சூப்பர் தருமாறு என்று கொண்டாடி வருகிறார்கள். இப்படி பீஸ்ட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பீஸ்ட் படம் செய்த வசூல் சாதனை:

முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள்

Vijay 66 Director Vamsi | விஜய் 66 பட இயக்குனர் வம்சி

என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

தளபதி 66 படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. மேலும், இப்படத்தின் காட்சிகளை 70% ஹைதராபாத்தில் நடந்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னையில் தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று படக்குழுவினருக்கு திட்டவட்டமாக சொல்லி விட்டாராம்.

படப்பிப்பு சென்னையில் நடக்க காரணம்:

ஏன்னா, சென்னையில் படப்பிடிப்பை நடத்தினால் தான் தமிழகத்தை சேர்ந்த பெப்ஸி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அதனால் சென்னையில் தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று விஜய் குறி இருக்கிறார். இந்த செய்தி விஜய் ரசிகர்களையும், பெப்சி ஊழியர்களையும் மகிழ்ச்சியடைய வைத்து இருக்கிறது. இதை அறிந்த பலர் விஜயின் பரந்த மனசை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்பு வெளியானதும் தற்போது கிட்டத்தட்ட 100 முதல் 200 தொழிலாளர்கள் இணைந்து படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தளபதி 66 படப்பிடிப்பு குறித்த தகவல்:

படத்தின் முக்கியமான காட்சிகள் சென்னையிலும், ஒரு சில காட்சிகள் மற்றும் மற்ற இடங்களிலும் படமாக்கப்பட உள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து தளபதி 66 படத்திற்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர். தற்போது தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்புக்கு படக்குழு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. கண்டிப்பாக தளபதி 66 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement