நான் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்து விட்டேன் – ‘கோட்’ படத்தைப் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் விஜய்

0
319
- Advertisement -

‘கோட்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது.

-விளம்பரம்-

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ‘கோட்’ படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கும் விஷயம் தான் வைரல் ஆகியுள்ளது.

- Advertisement -

கோட் படத்தைப் பார்த்த விஜய்:

அதாவது நடிகர் விஜய் ‘கோட்’ படத்தை பார்த்து இருக்கிறார். பின் இயக்குனர் வெங்கட் பிரபுவை அணைத்துக் கொண்டு, கலக்கிட்டீங்க என்று சொல்லி இருக்கிறார். தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் விஜய், ‘நான் அவசரப்பட்டு ரிட்டயர்மென்ட் அறிவித்து விட்டேன். இன்னொரு படம் உன் கூட பண்ணியிருக்கலாம் என தோன்றுகிறது’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது நாம் அறிந்ததே.

கோட் பட பாடல்கள்:

கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பின் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தப் பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. பவதாரணியின் குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கேலிக்கு உள்ளான ஸ்பார்க் பாடல்:

இந்நிலையில் சமீபத்தில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியிருந்தது. இப்பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். கங்கை அமரன் எழுதிய இப்பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலில் விஜய் மிகவும் இளமை தோற்றத்தில் இருப்பது போல காட்டியிருந்தார்கள். மேலும் பாடலில் வரும் விஜய், அவரைப் போல் இல்லை என்று இணையவாசிகள் விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். பாடலில் விஜயை இளமையாக காட்டுவதற்காக டிஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி உள்ளார்களாம்.

டிஏஜிங் குறித்து:

அதாவது ‘கோட்’ படத்தில் நிறைய ஜானர்கள் இருக்கின்றதாம். மேலும் படத்தில், விஜயை குளோனிங் செய்வது போல் ஸ்டோரில் லைன் இருக்கிறதாம். கதைப்படி குளோனிங் ஃபெயிலியர் ஆகிவிடுமாம். அதனால் தான் ஸ்பார்க் பாடலில் உள்ள விஜய்யின் உருவம் அப்படி இருக்கிறது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த டிஏஜிங் கருத்துக்கள் படக்குழுவினால் கவனிக்கப்பட்டு வருகிறதாம். மேலும் அவர்கள் அதை சரி செய்து வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் கோட் திரைப்படம் மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement