புதிய கெட்டப்பிற்கு மாறிய விக்ரம்.! எப்படி தான் இவரால மட்டும் முடியுதோ.!

0
1454
Vikram
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் விக்ரம். டெடிகேஷன் என்றால் அது கமலுக்கு பின் விக்ரம் என்று கூறலாம். மேலும், இவர் நவீன கால சிவாஜி கணேசன் என்று கூறினாலும் அதற்கு மிகையில்லை. அதற்கு காரணம் ஒவ்வொரு படத்திற்கும் இவர்போடும் கெட்டப் தான்.

-விளம்பரம்-

படங்களுக்காக விக்ரம் எடுக்கும் முயற்சிகள் மற்றும் தனது உடலை வருத்திக்கொள்ளும் விதம் அரைவரையும் வியக்க வைக்கும். இந்த நிலையில் விக்ரமின் சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றை கண்டு பலரும் வியந்து வருகின்றனர்.

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாண்டவர் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நபர்கள் சுவாமி சங்கரதாஸ் அணியை உருவாக்கி உள்ளனர். இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டியி நிலவி வருகிறது. 

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர். 

-விளம்பரம்-

தற்போது நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் என்று பலரும் வாக்களித்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் விக்ரம் வாக்களிக்க வந்துள்ளார். அவர் சற்று வித்யாசமான கெட்டப்பில் உள்ளார். நீளமான முடி, வெள்ளை தாடி என அவரது தோற்றத்தில் திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Advertisement