மாஸ்டர், புலி, துப்பாக்கி என்று ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் மேனரிஸம். (அதுவும் துப்பாக்கி சீன் செம)

0
24524
kong
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தளபதி என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் உச்ச நடிகர்களின் ரெபரஸ்ஸை சில நடிகர்கள் தங்களுடைய படங்களில் பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றுதான். நடிகர் விஜய் கூட தன்னுடைய பல்வேறு படங்களில் எம்ஜிஆர் ரஜினி போன்றவர்களின் மேனரிசத்தை பயன்படுத்தியிருக்கிறார். அதே போல பல்வேறு இளம் நடிகர்கள் விஜய் படங்களில் ரெபரஸ்ஸை தங்களுடைய படங்களில் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான்.

-விளம்பரம்-

ஆனால் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஹாலிவுட் படத்தில் விஜய்யின் மேனரிஸம் இருப்பதாக விஜய் ரசிகர்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஹாலிவுட் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வருவது வாடிக்கையான விஷயம் தான் அதிலும் மிருகங்கள் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அதற்கு தனி வரவேற்பு தான் அந்த வகையில் குரங்கை வைத்து எடுக்கப்பட்ட கிங்காங் தொடர் படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

2005 ஆம் ஆண்டு வெளியான கிங்காங் என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியான காங் : தி ஸ்கல் ஐலாண்ட் திரைப்படமும் வெற்றி பெற்றது. இப்படி ஒரு நிலையில் இப்படங்களின் தொடர்ச்சியாகத் தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படம் இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் காங் செய்யும் சில மேனரிசம் விஜய்யின் புலி, மாஸ்டர், துப்பாக்கி போன்ற படங்களின் வருவது போல இருக்கிறது என்று ரசிகர்கள் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement