என்னது தல போய் கேட்டும் நோ சொல்லிட்டாரா விஜய் – இது தான் காரணமா ?

0
1063
Dhoni
- Advertisement -

தல தோனி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு நடிகர் விஜய் நோ சொல்லியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .

-விளம்பரம்-

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து இருக்கிறார். மேலும், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஐபில் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறை கோப்பையை தட்டி சென்றது.

- Advertisement -

தோனி குறித்த தகவல்:

அதோடு சில ஆண்டுக்கு முன் இவரின் வாழ்கை திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தோனி சினிமாவிற்கு எப்போ வருவார்? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தான் தோனி சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்:

இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுத்து இருக்கிறார். அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். அந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷியே எழுதி இருக்கிறார். அந்த கதையை தோனி 3d வடிவில் எடுக்க இருக்கிறாராம். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி தான் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

எல்ஜிஎம் படம்:

இந்த படத்திற்கு Let’s Get Matried என தலைப்பு வைத்திருக்கின்றனர். சுருக்கமாக LGM என அழைக்கிறார்கள். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், இவானா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை தோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்க மறுத்த காரணம்:

இந்த நிலையில் தல தோனி தயாரிக்கும் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, முதலில் தோனி அவர்கள் விஜயை சந்தித்து lgm படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். அதற்கு விஜய் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னார். ஆனால் , அதற்கு பிறகு விஜய் படத்தில் நடிப்பது குறித்து எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை. தோனி இனிமேலும் காத்திருக்க வேண்டாம் என்று ஹரிஷ் கல்யயானை வைத்து தன்னுடைய பட வேலையை இயக்கத் தொடங்கினார். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் மும்முறமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் பலருமே தோனியின் எல்ஜிஎம் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement