விஜய் நடிக்க மறுத்து அதில் மாதவன் நடித்து மாஸ் ஹிட்டான படம் எது தெரியுமா ?

0
9043

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த பெரும்பாலான படங்கள் மெகா ஹிட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில நாட்களுக்கு முன்னர் கூட விஜய் நடிக்காமல் தவறவிட்ட ஹிட் படங்களின் வரிசையை நமது பக்கத்தில் பார்த்தோம்.

Run

அந்த வரிசையில் நடிகர் மாதவனுக்கு ஒரு திருப்பு முனை படமாக அமைந்திருந்தது 2002 இல் வெளியான ரன் படம்.ஆனந்தம் என்ற குடும்ப படத்திற்கு பிறகு இயக்குனர் லிங்குசாமியின் 2வது படம் தான் ரன் இந்த படம் அந்த ஆண்டின் மிக பெரிய ஹிட்டானது.இந்த படம் முதலில் நடிகர் விஜய்க்கு தான் வந்தது ஆனால் அப்போது ஷாஜகான், யூத்,தமிழன் என்ற மூன்று படங்களில் நடித்திருந்தார் விஜய் ஆதனால் ரன் படத்தின் வாய்ப்பை தவரவிட்டார் விஜய்.மேலும் 2002 இல் விஜய் நடித்த 3 படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பிடிக்க தவறியது.

ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடித்திருந்த்தால் அந்த ஆண்டில் விஜய்கு அந்த படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்திருக்கும். ஆனால் கில்லி என்ற அதே கடைத்தளத்தை கொண்ட படத்தில் 2004 நடித்து விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.ஒரு வேலை விஜய் ரன் படத்தில் நடித்திருந்த்தால் விஜய் க்கு அப்போதே ஒரு மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்திருக்கும்.