போராட்டத்தின் பாதியில் கிளம்பிய விஜய் ! ஏன் தெரியுமா ? வெளிவந்த உண்மை நிலை இதோ

0
3496
Actor vijay
- Advertisement -

தமிழகத்தில் காவேரி வாரியம் அமைக்க வலியுரித்தி தமிழ் சினிமா சங்கம் சார்பில் நேற்று சென்னையில் மௌன போராட்டம் நடைபெற்றது. பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் அஜூத் மற்றும் சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

nadigar sangam

ஆனால் நடிகர் விஜய் போராட்ட களத்தில் முதல் ஆளாக பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய விஜய் தற்போது படங்களில் கூட விவசாயத்திற்கு அதரவளித்தே பேசி வருகிறார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற காவிரி போராட்டத்தில் விஜய் போராட்டம் முடிவதற்கு முன்பாகவே சென்று விட்டார் என்று ஒரு சில விவாதங்கள் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

அதாவது 9 மணி முதல் 1 மணி வரை அறிவிக்கபட்ட இந்த போராட்டத்தில் விஜய் ஒரு சில மணிக்காகளுக்கு முன்பாகவே கிளம்பிவிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றது.ஆனால் 1 மணி வரை விஜய் இருந்தால் அவர் செல்லும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடுமோ என்று கருதியே அவரை சீக்கிரமாக அனுப்பி வைத்துவிட்டனர் என்று ஒரு சில தரப்பில் இருந்து கூறிவருகின்றனர்.

எது எப்படியோ ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் சரி,தற்போது நடக்கும் விவசாயிகள் பிரச்சனையிலும் சரி நடிகர் விஜய் யாருக்கும் அஞ்சாமல் தன்னால் முடிந்த ஆதரவை தெரிவித்துதான் வருகிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை தான்.

Advertisement