தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அதிரடி உத்தரவிட்ட த.வெ.க தலைவர் விஜய்- விவரம் உள்ளே

0
113
- Advertisement -

தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம், நடிகர் விஜய்க்கு நாளை 50 ஆவது பிறந்த நாள். இதை கொண்டாட ரசிகர்கள் பலருமே ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாட பல திட்டங்களை நிர்வாகிகளும், ரசிகர்களும் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்தில் இருந்தே விஜயின் பெயரில் சோசியல் மீடியாவில் ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்களை இன்று ரீ ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் பிறந்தநாள்:

அந்த வகையில் பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய ஐந்து படங்கள் தான் வெளியாகி இருக்கிறது. இதில் மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் விஜய் குறித்த செய்திகள் அதிகமாக வைரலாகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தன் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு குறித்து புஸ்ஸி ஆனந்த் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஸ்ஸி ஆனந்த் பதிவு:

அதில் அவர், என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் உடைய குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாக சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். தலைவர் அவர்களின் உத்தரவின்படி கழக நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

கள்ளக்குறிச்சி சம்பவம்:

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 34க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் சம்பவம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது.

நேரில் சென்ற விஜய்:

மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதனால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார். பின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார்.மேலும், நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாம் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement