நீரில் மூழ்கிய சீரியல் செட்டுகள், நின்று போன ஷூட்டிங்குகள் – இந்த சீரியல் எல்லாம் இங்க தான் நடக்குதாம்.

0
272
- Advertisement -

மிக்ஜாம் புயலால் மொத்த சீரியல் செட்டே பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள்.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

சில தினங்களுக்கு முன் தான் காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அதோடு சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலருமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சின்னத்திரை சீரியல் சூட்டிங் நடக்கும் இடம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா போன்ற தொடர்கள் எல்லாம் எடுக்கப்படும் இடம் ஏ ஆர் எஸ் கார்டன். இந்த ஸ்டூடியோவில் தான் கோர்ட், போலீஸ், கோயில் செட்டப் என்று பல செட்கள் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த மழையால் இந்த மொத்த செட்டே நீரில் மூழ்கி இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியல் செட் குறித்து சொன்னது:

மேலும், இது குறித்து அந்த இடத்தில் பணிபுரியும் வாட்ச்மேன் கூறியிருப்பது, மழையால் மொத்த இடமே மூழ்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், கனா காணும் காலங்கள் போன்ற பல சீரியல் எல்லாம் எடுக்கப்பட்டது. மின்சார வசதி எதுவும் இல்லை. இன்னும் இந்த இடம் சீர் செய்ய 10 நாட்களுக்கு மேல் ஆகும். இங்கு இருக்கும் நீரை வெளியேற்றிய பிறகு தான் அனைத்தும் இயல்பு நிலைக்கு மாறும். நாங்களே மூன்று நாட்கள் சாப்பாடு இல்லாமல் வெறும் தண்ணியை குடித்துக் கொண்டு வாழ்ந்திருந்தோம் என்று வேதனையாக கூறியிருந்தார்.

தீபக் அளித்த பேட்டி:

இவரை அடுத்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் ஹீரோ தீபக் பேட்டியில், மொத்த சென்னையே இந்த மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. எல்லா இடமும் வெள்ளைத்தால் மூழ்கப்பட்டு இருக்கிறது. மூன்று நாட்கள் தண்ணீர், உணவு, உடை, கரண்ட் இல்லாமல் அதிகமாக பாதிக்கப்பட்டு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பணக்காரர், ஏழை என்று யாராக இருந்தாலுமே அடிப்படை தேவையான உணவு, உடை இல்லை என்றால் சிரமம் தான். அதை இந்த புயல் எல்லோருக்கும் காண்பித்து விட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை இன்னும் சில தினங்களிலேயே எல்லாம் இயல்பு நிலைக்கு மாறும் என்று கூறியிருந்தார்.

Advertisement