வெற்றி துரைசாமியின் இறப்பு, வீட்டின் உள்ளே வரை சென்று இரங்கல் தெரிவித்த அஜித், இரங்கல் தெரிவிக்க வந்து பாதிலேயே திரும்ப சென்ற விஜய்.

0
192
- Advertisement -

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த சென்று பாதியில் திரும்பி இருக்கிறார். சென்னை மாநகரின் முன்னாள் மேயர் துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே ஒலிக்கிருக்கிறது கடந்த பிப்ரவரி நான்காம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் இன்னவோர் மாவட்டத்தில் உள்ள வாங்கி நாளா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி துரைசாமியின் கார் சென்றுள்ளது.

-விளம்பரம்-

கார் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்படியே விழுந்துள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பர் கோபினாத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது அவரது உடலை மீட்புக்குழிவினர் தேடி வந்தனர்.

- Advertisement -

விபத்து நடந்து ஒரு வாரம் மேலாகியும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படாததால் தன் மகன் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில்  வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல், சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.

வெற்றி துரைசாமியின் உடல் இன்று (பிப்.13) சென்னை கொண்டுவரப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

-விளம்பரம்-

அஜித் ஒரு சாகச விரும்பி என்பது நாம் அனைவருக்கும் தெரியும் உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடிகர் அஜித் பைக் பயணத்தில் சென்றிருக்கிறார் இந்த பழக்கம் தான் அஜித் மற்றும் வெற்றி துரைசாமி இதுவரையும் நண்பர் ஆக்கியது. நண்பனின் இறப்பில் நடிகர் அஜித், வெற்றி துரைசாமி வீட்டில் இருந்து சோகத்துடன் வெளியில் வந்தார். இப்படி ஒரு நிலையில் வெற்றி துரைசாமி இறப்புக்கு அஞ்சலி செலுத்த விஜய் சென்று இருக்கிறார்.

ஏற்கனவே அங்கே பல ஆயிரம் பேர் கூடி இருந்த நிலையில் விஜய்யால் உள்ளே செல்ல முடியவில்லை. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் நடிகர் விஜய் பாதியிலேயே திரும்ப சென்றுவிட்டார். நடிகர் அஜித், வெற்றி துரைசாமியின் வீட்டின் உள் வரை சென்று இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் விஜய் பாதியில் திரும்பி வந்துள்ளது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

Advertisement