ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்தடைந்த விஜய். வைரலாகும் வீடியோ – என்ன ஆனது தளபதி65 ஷூட்டிங் ?

0
704
Vijay

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது.

இப்படி ஒரு நிலையில் அந்த படத்தின் வாய்ப்பை இயக்குனர் நெல்சன் தட்டி தூக்கினார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இதையும் பாருங்க : தெறி படத்திற்கு முன்பே அட்லீக்கும் விஜய்கும் இருந்த நட்பு – அட்லீயின் திருமணத்திற்கு சென்றுள்ள விஜய் மற்றும் அவரது மனைவி.

- Advertisement -

கடந்த மாத இறுதியில் இப்படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, முதற்கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு, 18 நாட்கள்வரை படப்பிடிப்பு நடத்திய படக்குழு, முக்கியமான சண்டைக்காட்சி மற்றும் விஜய்க்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையேயான ஒரு டூயட் பாடலையும் படமாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் திட்டமிடப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இந்தியா திரும்பியுள்ளது. இன்று அதிகாலை நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

image

அதே போல ஜார்ஜியாவில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது, ஷூட்டிங் முடிந்ததும் நேராக ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் போய்விடுவாராம் விஜய். இரண்டு முறை ஷாப்பிங்கிற்காக வெளியே வந்திருக்கிறார். மற்றபடி ஷுட்டிங் தவிர்த்து மற்ற நேரங்களில் ஹோட்டல் அறையைவிட்டே விஜய் வெளியே வரவில்லை என்கிறார்கள் படக்குழு வட்டாரத்தினர். அதே போல தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணத்தால் இங்கு படப்பிடிப்பு நடக்குமா நடக்காத என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement