சமீபத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்தவில்லை நடிகர் விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர். விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு.

நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று கடுமையாக கூறி இருந்தனர்.இதுமட்டுமல்லாம் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விஜய்யை பலரும் விமர்சித்து வந்தனர்.

இதையும் பாருங்க : சார்பட்டா பரம்பரை பருவதத்திற்கும், இடியப்ப பரம்பரை தனலக்ஷ்மி க்கும் ரோசமான சண்டை – நாகேஷ் படத்தின் காட்சி.

Advertisement

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இருந்தார். இதுகுறித்து விஜய்யின் வழக்கறிஞர் கூறுகையில்,தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறோம். என்று கூறி இருந்தார். இந்த வழக்கு வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் நுழைவு வரி பாக்கி 80 சதவீதத்தை 1 வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணை நடைபெற்றது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

Advertisement

அப்போது அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement
Advertisement