சார்பட்டா பரம்பரை பருவதத்திற்கும், இடியப்ப பரம்பரை தனலக்ஷ்மி க்கும் ரோசமான சண்டை – நாகேஷ் படத்தின் காட்சி.

0
8783
sarpatta
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இதையும் பாருங்க : ஏன் இப்படி உங்கள அசிங்கமா ஆக்கிகிறீங்க – சூப்பர் சிங்கர் பிரகதியின் கோலத்தை கண்டு கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது. அதே போல ரஞ்சித் எம் ஜி ஆரை தவறாக சித்தரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் இருக்கிறது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தான் பெற்று இருக்கிறது.

🔴SARPATTA PARAMBARAI - Making Video | Arya, Kalaiyarasan, Pasupathi | Pa  Ranjith - YouTube

உண்மையிலேயே சார்பட்டா பரம்பரை என்ற ஒன்று இருந்ததா என்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதோ இந்த வீடியோவை பாருங்கள். அந்த காலத்தில் வெளியான ஒரு படத்தில் நாகேஷ் நடித்துள்ள ஒரு காட்சியில் சார்பட்டா பரம்பரை குறித்தும் இடியப்பா பரம்பரை குறித்து பேசி இருக்கிறார். இதில் இருந்தே ரஞ்சித் எந்த அளவிற்கு ரிசர்ச் செய்து இந்த படத்தை எடுத்துள்ளார் என்பது புலப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement