பெரியார் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிதாவின் கடவுள் பக்தியை கேலி செய்த கேட்ட ரசிகர். அனிதா கொடுத்த பதிலடி.

0
1209
anitha
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

அதுவும் சுரேஷ் சக்ரவர்த்தி இடம் அடிக்கடி இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் அதிலும் குறிப்பாக எவருக்கும் சக்கரவர்த்திக்கும் ஏற்பட்ட சுமங்கலி பஞ்சாயத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், இந்த விஷயத்தில் கமலே, அனிதா சம்பத்தை பாராட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : ஷாருக்கான் படத்திற்காக பிரபல வெப் சீரிஸ்ஸில் கண் வைத்துள்ள அட்லீ – அப்போ இதுவும் காப்பியா ?

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அனிதா சம்பத், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், பிக் பாஸ் வீட்டில் சுமங்கலி பஞ்சாயத்தில் கமல் பாராட்டி இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

அதில், பெரியார் எங்கள் பெருமை! ஆயிரம் விமர்சனம் வந்தாலும் எங்க தலைவன் தலைவன் தான்! காலத்தை வென்று எப்போதும் உங்க சீர்திருத்த எண்ணங்கள் மக்களை சென்று அடைய நாங்க இருக்கோம்! இன்னும் 1000 வருடங்கள் கடந்தாலும் மறக்கடிக்க முடியாத தலைவன் பெரியார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு ரசிகர் ஒருவர், அனிதா சம்பத் தனது யூடுயூப் பக்கத்தில் சமீபத்தில் போட்டிருந்த ஆடி அம்மன் பூஜை வீடியோவை குறிப்பிட்டு ‘உங்கள் ஆடி அம்மன் பூஜை Vlog நன்றாக இருந்தது’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அனிதா ‘பெரியாரை நேசிப்பதால் நான் சாமி கும்பிட மாட்டேன் என்பதற்கான சான்றிதழ் தேவை கிடையாது. நான் சாமி கும்பிடுவது யாரையும் பாதிக்காது. பகுத்தறிவு தான் அவரிடம் இருந்து கத்துகிறேன் சாமி கும்பிட கூடாதுனு அவர் சொல்ல பகுத்தரிய தான் சொல்லி தந்தார், இன்னும் அழகா இருக்கீங்க’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement