ட்விட்டரில் மோடியை பின்னுக்கு தள்ளி தேசிய அளவில் விஜய் முதல் இடம்.! இதான் காரணம்.!

0
772
Vijay

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் விஸ்வாசம் மற்றும் பேட்ட படம் தான் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தை இன்று ஒரு நாள் மட்டும் விஜய்யின் சர்கார் திரைப்படம் பிடித்திருந்தது.

இதற்கு முக்கிய காரணமே சன் டிவிவில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ‘சர்கார்’ படத்தை போட்டுள்ளனர். இதனால் குஷியடைந்த விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #PeoplesSARKARPremiere என்கிற ஹாஸ் டேக் உருவாக்கினார்.

- Advertisement -

அந்த ஹாஸ் டேக்கில் இன்று ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்விட்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் #PeoplesSARKARPremiere என்ற ஹாஸ் டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தது.

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து உருவாக்கப்பட்ட #GOBackModi ஹாஸ் டேக் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்திலும் அஜித்தின் விஸ்வாசம் நான்காவது இடத்திலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆனால், தற்போது தனுஷின் அசுரன் முதல் இடத்திலும், #GOBACKMODI இரண்டாவது இடத்திலும்
#PeoplesSARKARPremiere மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement