யார் கொடுக்குறாங்கன்னு முக்கியமில்லை. உயிரக் காப்பாத்துறதுதான் முக்கியம்?

0
1823
Vijay

விஜயோடு அவ்வப்போது வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட்டில் வலம் வரும் அவரை நேரில் சந்தித்தோம். அவர், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் நற்பணி மன்றத்தின் அகில இந்தியத் தலைவரான புஸ்ஸி ஆனந்த்!
விளம்பரத்துக்காக வசனம் பேசுபவர் விஜய் என்றும் விமர்சனங்கள் எழுகின்றதே.?

எதையும் விளம்பரம் செய்துகொள்ளாதவர் அவர். இந்தக் கேள்வி கேட்டதுக்காக நீண்ட நாள்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு சாதாரண கூலித் தொழிலாளியோட குழந்தைக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டது.

இது விஜய் சாரோட கவனத்துக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னார். நான் அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்தேன். ‘பெரிய ஆஸ்பத்திரியில எப்படிச் சேர்த்தீங்க?’னு குழந்தையோட அப்பாகிட்ட கேட்டேன். அவசரத்துக்கு பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரின்னு சேர்த்துட்டேன் ‘ன்னு சொன்னாரு.
vijay
அவங்க உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். ஒரு பெரிய தொகையை நிரப்பி செக் எழுதிக்கொடுத்தாரு. ‘நீங்களே வந்து கொடுத்தா நல்லாருக்குமே’னு சொன்னேன். ‘யார் கொடுக்குறாங்கன்னு முக்கியமில்லை. உயிரக் காப்பாத்துறதுதான் முக்கியம்’னு சொன்னாரு. அவங்களுக்கு அந்த செக்கை நான் போய் கொடுத்தேன். நள்ளிரவு ஒன்னரை மணியிருக்கும், எனக்கு கால் செஞ்ச விஜய் சார், ‘குழந்தை எப்படி இருக்கு? வேற என்ன உதவி வேணும்னு கேளு. கூட இருந்து பார்த்துக்கோ’னு சொன்னார்.

இன்னைக்கு அந்தக் குழந்தை நல்லாருக்கு. இதுதான் விஜய் சாரன் இயல்பான குணம். அவர்கிட்ட இருப்பது உணர்வு, விளம்பரமல்ல.