20 ஆண்டுகளுக்கு பின் இப்ப தான் நல்ல கதையை கேக்குறேன்- விஜய் சொன்னதா தயாரிப்பாளர் அளித்த பேட்டி.

0
244
vijay
- Advertisement -

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என்று விஜய் கூறியதாக தயாரிப்பாளர் ராஜு அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறும். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் தகவல்:

மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தளபதி விஜயின் அடுத்த படத்திற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘தளபதி 66’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்.

தளபதி 66 படம் பற்றிய தகவல்:

பின் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் தளபதி 66 படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டி:

தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா ஆகும். இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் விஜய் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தின் கதையை கேட்டு விஜய் என்னிடம், 20 வருடங்களுக்கு பிறகு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற ஒரு நல்ல கதையை கேட்டிருக்கிறேன் என்று விஜய் கூறியிருந்தார்.

‘தளபதி 66’ படம் விவரம்:

அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. அதே போல் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதமே தொடங்கும். திட்டமிட்டபடி படப்பிடிப்பு எல்லாம் சரியாக நடந்தால் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement