அன்று தூத்துக்குடி..!இன்று நாகை..!ரகசிய விசிட் செல்ல இருக்கும் விஜய்..!

0
684
Vijay
- Advertisement -

நடிகர் விஜய் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்திருந்தலும் அண்மைக்காலமாக யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக உதவிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ரசிகர்கள் மூலம் நிதி உதவியை கொண்டுசேர்த்தார்.

-விளம்பரம்-

gajacyclone

- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வரை ரகசியமாக சென்று தேவையுடையோருக்கு உதவிகள் செய்வது நடிகர் விஜயின் வழக்கமாக உள்ளது.

அண்மையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சென்று பண உதவியை அளித்தார் நடிகர் விஜய்.

-விளம்பரம்-

Vijaysterlite

இந்நிலையில இந்த முறையும் இரவோடு இரவாக வந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை யாருக்கும் தெரியாமல் நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், எங்கு செல்லலாம், எப்போது செல்லலாம் என்று ஆராய்ந்து கூறுமாறு நாகை மாவட்ட ரசிகர் மன்றத்திற்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.எனவே, விரைவில் நடிகர் விஜய் புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை நேரில் சந்திப்பார் என்று நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது.

Advertisement