ஹரிஷ் கல்யாணோட அந்த படத்த மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணேன், ஆனா கார்த்தி படத்துக்கு பீல் பண்ணல.

0
3329
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவரிடம் நீங்கள் ஏதாவது படத்தை மிஸ் செய்திருக்கிறீர்களா? அதற்காக வருந்தி இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு விஜய் சேதுபதி அவர்கள் கூறியது, நான் படங்களை மிஸ் செய்திருக்கிறேன். ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம். அந்த படத்தில் நடிக்க முதலில் என்னிடம் கேட்டார்கள். அப்ப இருந்த சூழ்நிலை என்னால் நடிக்க முடியாமல் போனது. பின் அந்த படத்தில் ஹாரிஸ் நடித்தார். நான் படத்தில் நடிக்கவில்லையே என்று ரொம்ப பீல் பண்ணி இருக்கேன்.

இதையும் பாருங்க : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை யாருன்னு தெரியுதா ? பாத்தா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

அதே மாதிரி கைதி படம். கைதி படத்தில் நான் நடிக்கவில்லை என்று கவலைப்படவில்லை. நான் நடித்து இருப்பதைவிட கார்த்திக் அருமையாக நடித்து இருந்தார். அதனால் தான் அந்த படம் அந்த அளவிற்கு ஹிட் கொடுத்தது என்று ஓப்பனாக கூறியுள்ளார். மேலும், மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளிவந்த படம் ;லாபம். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்ட கதை. இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement