விமல் வீட்டில் நடந்த விசேஷம் – தன் குடும்பத்துடன் நேரில் சென்ற விஜய் சேதுபதி (இன்னும் தொடரும் நட்பு)

0
9096
vjs
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தான். அந்த வகையில் நடிகர் விமலும் ஒருவர்.நடிகர் விமல், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து நடிகர் விமல் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகி இருந்தது.நடிகர் விமல் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : விஜய் படத்தில் ஒரு சில நாட்கள் நடித்து பின்னர் நீக்கப்பட்டுள்ள மகேஷ் பாபுவின் மனைவி – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

- Advertisement -

இவரது திருமணம் களவாணி படத்தில் காண்பிக்கப்பட்டது போல தான் நடந்தது. நடிகர் விமல்,அக்ஷயா என்பவரை காதலித்தார். ஆனால், அவர்களின் வீட்டில் சம்மதிக்காததால் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்ல அவரது மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர். மேலும், இவர் கடந்த ஆண்டு 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போதே கொரோனா நோயாளிகளுக்காக சேவை செய்தார்.

நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து சேவை செய்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விமல், தனது மகன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி தன் குடும்பத்துடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் இருந்த போதே விமலை அவருக்கு தெரியும். அந்த நட்பை இன்றும் தொடர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-
Advertisement