பொது மேடையில் சிம்புவை மறைமுகமாக எச்சரித்த விஜய்சேதுபதி ! விவரம் உள்ளே

0
2488
simbu

ஜீவா – நிக்கிகல்ராணி நடித்துள்ள படம் கீ. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன், AAA படத்தில் சிம்புவின் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு தற்போது வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேடையில் விஷாலை பார்த்து கேட்டார். இதனால் அந்த மேடை சலசலப்பானது .

vijay-sethubathi

இந்த சம்பவங்கள் பிடிக்காத விஜய்சேதுபதி மெதுவாக எழுந்து நிகழ்ச்சியை விட்டு சென்றார். ஆனால் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்த மேடையில் பேச வைத்தனர்.

சரியாக, ஒரு படம் தயாரிக்க தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்படுகிறார். எந்த ஒரு உத்திரவாத நம்பிக்கையும் இல்லாமல் உங்கள் மீது முதலீடு செய்கிறார். அதனை நாம்தான் சரியாக முடித்து கொடுக்க வேண்டும். என பேசினார். மைக்கேல் ராயப்பனின் புகாரை அடுத்து வந்து பேசிய விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கஷ்டத்தை பற்றி பேசியதால் அவரை சிம்புவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தது போன்று இருந்தது.