தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.
இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது.
மேலும், இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ஆகும். சமீபத்தில் கூட இந்த படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது.
விஜய் சேதுபதி குறித்த தகவல்:
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.
விஜய் சேதுபதி-பூரி ஜெகன்நாத் கூட்டணி:
இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஏஸ் என்ற படத்திலுமே விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதை அடுத்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புது படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
விஜய் சேதுபதி பேட்டி:
இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சாந்தனுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பூரி ஜெகன்நாத்- விஜய் சேதுபதி கூட்டணி அறிவிப்பு வந்தவுடனே சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்தும், கிண்டல் கேலியும் செய்திருந்தார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி, என்னுடைய இயக்குனர்கள் இதற்கு முன்பு செய்த படங்களை வைத்து எல்லாம் நான் அவர்களை மதிப்பிட மாட்டேன்.
இயக்குனர் பற்றி சொன்னது:
எனக்கு கதை பிடித்திருந்தால் அதில் நான் நடித்து விடுவேன். அவர் சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த படம் ஒரு முழுமையான ஆக்சன் படமாக இருக்கும். இப்படியான ஒரு கதைக்களத்தில் இதற்கு முன்பு நான் செய்யவே இல்லை. நான் செய்த விஷயங்களை மீண்டும் செய்யாமல் புதிதாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். படத்தினுடைய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும். படத்தில் நடிகை தபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அவர் ரொம்ப திறமையான நடிகை. இதுபோன்ற நடிகை உடன் பணிபுரிவதை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.