இந்த கேள்வியை என்கிட்ட ஏன் கேக்குறீங்க. பத்திரிகையாளர்கள் கேள்வியால் கடுப்பான விஜய் சேதுபதி.

0
8406
vijay-sethupathy
- Advertisement -

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுநிலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இவர் தற்கொலைக்கு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே காரணமாக இருக்குமா? என்று போலீசார் பல விசாரணைகள் நடத்தி வந்தார்கள். மேலும்,இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் மாணவியின் செல்போன் ஆராய்ந்து பார்த்த போது அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என தெரிய வந்தது. அதோடு இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். மேலும்,அவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் அந்த செல்போன் பகுதியில் கூறியிருந்தார். மேலும்,அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் எட்டாம் தேதி பதிவு செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. மேலும்,மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றபட்டது. மேலும், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

-விளம்பரம்-
Image result for vijay sethupathi angry"

- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. மேலும்,இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் “சங்கத் தமிழன்” படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ்,சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் அவர்கள் இசை அமைத்து உள்ளார்கள். சங்கத்தமிழன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல் ராஜ்.

மேலும்,இந்த சங்கத் தமிழன் படம் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி, ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. இந்நிலையில் வீரம், பைரவா படங்களை தயாரித்த விஜயா புரொடக்சன் நாகிரெட்டி தான் விஜய் சேதுபதியின் சங்கதமிழன் படத்தையும் தயாரித்து உள்ளார். விஜய் சேதுபதியின் சங்கதமிழன் படம் விஷால் நடித்த ஆக்சன் படத்திற்கு போட்டியாக திரையரங்கில் வெளியாகி உள்ளது. ஆனால் ,சங்கத் தமிழன் படம் வெளியிடுவதற்கு முன்னால் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது. கடைசி நேரத்தில் கூட அஜித் நடித்த வீரம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட முன்வரவில்லை. இதனால் கடும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

Image result for fathima latheef"

அந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதி அவர்களுக்கு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு பத்திரிகையாளர்கள் விஜய் சேதுபதியை சந்தித்து பல கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது அந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் விஜய் சேதுபதியிடம் ஐஐடி மாணவி பாத்திமா இறந்ததைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் பயங்கர சத்தமாக பேசி உள்ளார். உடனே விஜய் சேதுபதி அவர்கள் ‘அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க’? என வெறுப்புடன் பதிலளித்தார். மேலும், விஜய் சேதுபதி அவர்கள் இப்படிப் பேசியதை கேட்டு அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி ஆனார்கள். அதோடு விஜய் சேதுபதியா? இப்படிப் பேசுவது என ஷாக் ஆகி விட்டனர். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் விஜய் சேதுபதி பேசிய வார்த்தைகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இது குறித்து பல பேர் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement