அட கடவுளே, தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி பட இயக்குனரை இப்படி அம்மி அரைக்க வச்சிடுச்சே கொரோனா.

0
930
seenuramasamy
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘கூடல் நகர்’. இதில் ஹீரோவாக பரத் நடித்திருந்தார். அதுவும் பரத் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். இந்த படத்தினை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இது தான் சீனு ராமசாமி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப் பறவை, தர்ம துரை, கண்ணே கலைமானே, இடம் பொருள் ஏவல்’ என அடுத்தடுத்து சில படங்களை இயக்கினர் சீனு ராமசாமி.

-விளம்பரம்-
Vijay Sethipathi

இதில் ‘தென்மேற்குப் பருவக்காற்று, தர்ம துரை, இடம் பொருள் ஏவல்’ ஆகிய மூன்று படங்களும் இயக்குநர் சீனு ராமசாமிக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இம்மூன்று படங்களிலுமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், ‘இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் மட்டும் எடுத்து பல ஆண்டுகள் ஆகியும் சில காரணங்களால் இன்னும் வெளி வரவில்லை.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் இயக்குநர் சீனு ராமசாமி அவரது வீட்டில் ரசம் வைத்துக் கொண்டிருக்கிறார். வீடியோவின் முடிவில் “கொரோனாவின் ஊரடங்கினால் ஒரு ரசவாதம் நிகழ்கிறது” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது ‘மாமனிதன்’ மற்றும் ‘ஸ்பா’ என இரண்டு தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. இதில் ‘மாமனிதன்’ என்ற படத்தில் கதாநாயகனாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருக்கிறார்

Advertisement