விடுதலை படத்தில் சூரியை விஜய் சேதுபதி இதனால் தான் கொல்லவில்லையா – படத்துல இந்த சீன்ல இது நோட் பண்ணீங்களா ?

0
653
viduthalai
- Advertisement -

விடுதலைப் படத்தில் சூரியை நடிகர் விஜய் சேதுபதி கொல்லாததற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் மக்கள் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. ஆனால், இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். பின் போலீஸான சூரி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

படம் குறித்த விவரம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தில் பெருமாள் வாத்தியார் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவர் மக்களுக்காக போராடும் தலைவராக இருக்கிறார். சிறப்பு படையில் கார் டிரைவராக சூரி பணிபுரிகிறார். பெருமாள் வாத்தியாரின் உறவுக்கார பெண் தான் படத்தின் நாயகி தமிழரசி. இதை அறியாமல் சூரி அவர் மீது காதலில் விழுகிறார். பின் படத்தில் சிறப்பு படையில் இருக்கும் சூரியை கொலை செய்வதற்கு மக்கள் படை திட்டம் தீட்டுகிறது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி-சூரி காம்பினேஷன் காட்சி:

ஆனால், பெருமாள் வாத்தியார் விஜய் சேதுபதி அதற்கு அனுமதி தரவில்லை. சூரியை கொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். இதற்கு காரணம் என்ன? என்று பலருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதி, சூரியை கொல்லாததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, படத்தின் உறவுக்கார பெண்ணான தமிழரசியை சூரி காதலிப்பது விஜய் சேதுபதிக்கு தெரிய வருகிறது. திரையரங்க காட்சி ஒன்றில் சூரி, தமிழரசி இருவரும் படம் பார்க்க சென்று இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி சூரியை கொல்லாததற்கான காரணம்:

அப்போது விஜய் சேதுபதியும் சூரியின் பின் வரிசையில் அமர்ந்து இருக்கிறார். சூரியும், தமிழரசியும் பேசிக் கொண்டதை விஜய் சேதுபதி கவனித்திருக்கிறார். பெரும்பாலும், இதை படம் பார்க்கும்போது பலரும் கவனத்திற்கு மாட்டார்கள். தற்போது இந்த காட்சிதான் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். இதனால் தான் சூரியை கொல்ல வேண்டாம் என்று விஜய் சேதுபதி முடிவு செய்து இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர், வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். அது இரண்டாம் பாகத்தில் தான் தெரியவரும் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement