விஜய் சேதுபதி மகன் விஜய் அளித்த சர்ச்சை பேட்டிக்கு தந்தை கொடுத்திருக்கும் விளக்க வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர்.
View this post on Instagram
மேலும், இவர் சமீப காலமாக வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.இப்படி இருக்கும்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனியாக ஹீரோவாக நடித்து வருகிறார்.
பிரித்திவிராஜ் பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி மகன் சூர்யா, அப்பா வேற, நான் வேற. அதனால் தான் டைட்டிலில் கூட சூர்யா என்று வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இது தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், சில மாதங்களுக்கு முன் பிரித்திவிராஜ் அளித்த பேட்டியில், நான் சினிமாவில் பிரபலமாவதற்கு காரணம் என்னுடைய அப்பா தான். அவருடைய பிரபலத்தினால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று தன்னுடைய அப்பாவை புகழ்ந்து பேசியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=Ornk5x6ldIk
நெட்டிசன்கள் விமர்சனம்:
இப்படி பிரித்திவிராஜ்- சூர்யா பேசியதை ஒப்பிட்டு பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
அதில் சிலர், பல படங்களில் நடித்த நடிகர் இவ்வளவு தன்மையாக பேசும் போது ஒரு படத்தில் கூட நடிக்காத சூர்யா எப்படி எல்லாம் பேசுகிறார் என்று விமர்சித்திருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக விஜய் சேதுபதி இடம் கேட்டபோது அவர், நானும் பார்த்தேன். அவன் சொன்னது சரிதான். அவன் வேறு, நான் வேறு தான். என்னை பார்ப்பது போல் அவனைப் பார்த்தால் சமமாக பண்ண முடியாது.
விஜய் சேதுபதி கொடுத்த விளக்கம்:
அவனுடைய திறமையை வெளிப்படுத்த முடியாது. அவன் மாஸ் கமர்சியல் படம் பண்ண தான் ஆசைப்படுகிறார். அதுதான் அவனுக்கும் பிடிக்கும். விஜய், ரஜினி, கமல், அஜித் போல அவங்களுடைய மாஸ் படங்களை தான் அதிகம் பார்ப்பான். அதைப்போல தான் அவன் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறான் என்று கூறியிருக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார்.
View this post on Instagram
சூர்யா நடிக்கும் படம்:
அதனை அடுத்து தன்னுடைய தந்தையின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் 'Pheonix வீழான்' என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகயிருக்கிறார். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.





