96 பட தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை..!காரணம் விஜய் சேதுபதி மற்றும் விஷால் தான்..!

0
770
Vishal
- Advertisement -

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த நிறுவனமான மெட்ராஸ் இன்டெர்ப்பிரைஸஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

-விளம்பரம்-

Nandhagopal

- Advertisement -

தமிழில் ரோமியோ ஜூலியட், வீரசிவாஜி, துப்பறிவாளன்,96 போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளது மெட்ராஸ் இன்டெர்ப்பிரைஸஸ்.இந்நிலையில் நடிகர் விஷால்,விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோர் மெட்ராஸ் இன்டெர்ப்பிரைஸஸ்ஸின் உரிமையாளர் நந்தகோபால் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’, விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’, விஜய்சேதுபதி நடித்த ’96’ போன்ற படங்களை தயாரித்தவர் நந்த கோபால். இந்த படத்தில் நடித்த கதாநாயகர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

-விளம்பரம்-

இதையடுத்து பாதிக்கப்பட்ட நடிகர்களுக்கு சம்பள பாக்கி தரும் வரை எந்த படத்தையும் தயாரிக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் நந்தகோபாலின் மெட்ராஸ் இன்டெர்ப்பிரைஸஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

Advertisement