பிக் பாஸ் 8 தொடக்க விழாவில், போட்டியாளர் நடிகர் ரஞ்சித்தை விஜய் சேதுபதி வைத்து செய்ததுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விளக்குவதாக சமீபத்தில் தனது instagram பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, வி ஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8:
அந்த வகையில் நேற்று போட்டியாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு, பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
புளிச்💦💦💦#BiggBossTamil8 pic.twitter.com/6wB6zLrUOX
— U2 Brutus (@U2Brutus_off) October 7, 2024
போட்டியாளர் ரஞ்சித்:
இந்நிலையில் இந்த சீசனின் போட்டியாளராக நடிகர் ரஞ்சித்தை விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் ரஞ்சித் சமீபத்தில் 'கவுண்டம்பாளையம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. பிக் பாஸ் மேடையில் இப்போது டிரெண்டாக இருக்கும் விஜயகாந்தின் 'பொட்டு வெச்ச தங்கக் குடம்' பாடலோடு விவசாயியாக அறிமுக காணொளியில் வந்தார் நடிகர் ரஞ்சித் . மேலும், 'நான் காசு பணத்திற்காக இங்க வரவில்லை. மக்களோட அன்பைப் பெற வந்திருக்கிறேன்' என்று கூறினார்.
ரஞ்சித்தின் நண்பரை வச்சு செய்த விஜய் சேதுபதி:
அப்போது ரஞ்சித் நண்பர் ஒருவர் விஜய் சேதுபதியிடம், 'சாப்பிட்டீங்களா.. எங்க ஊர்ல நாங்க எல்லார்கிட்டயும் கேட்கிற முதல் கேள்வி இதுதான்' என்றார். அதற்கு விஜய் சேதுபதி கொஞ்சமும் யோசிக்காமல், 'எல்லா ஊர்லயும் எல்லாரும் அப்படிதான் கேட்பாங்க. இதில் என்ன வேறுபாடு' என்று பதிலடி கொடுத்திருந்தார். இதை அடுத்து ரஞ்சித்திடம், நீங்க நடித்த 'பீஷ்மர்' படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நல்ல நம்பிக்கைக்குரிய நண்பராக உங்களின் அந்த முகம் இன்னுமும் என் மனதில் இருக்கிறது என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

கவுண்டம்பாளையம் குறித்து விஜய் சேதுபதி:
ஆனால், நீங்க இப்போ நடித்திருக்கிற 'கவுண்டம்பாளையம்' படத்தில் உங்க முகம் வேற. அதுல பேசுனா ரஞ்சித் வேற ஆளா தெரிஞ்சாரு. அந்த முகத்தை நான் பார்க்கல. எது உங்களோட உண்மையான முகம்? என்று விஜய் சேதுபதி கேட்க. அதற்கு, 'கவுண்டம்பாளையம்' படத்துல நடிச்ச முகம் என்னுடையது அல்ல. நான் என்னை மாத்திக்கிட்டேன். என்னுடைய உண்மையான முகமே வேற. அதை காமிக்கத்தான் பிக் பாஸ் வந்திருக்கிறேன் என்றார் ரஞ்சித். கவுண்டம்பாளையம் சர்ச்சைகளில் ரஞ்சித் பேசியதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிப்பது போல தான் உள்குத்தோடு விஜய் சேதுபதி பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.






