பிரபல காமெடி நடிகர் மகனுக்கு விஜய் சேதுபதி செய்த உதவி, குவியும் பாராட்டுக்கள்

0
279
- Advertisement -

காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு நடிகர் விஜய் சேதுபதி செய்திருக்கும் உதவிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான மனிதர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் சினிமாவைத் தாண்டி பல விஷயங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும் இவர் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வரும் தகவல் சமீபத்தில் இணையதளத்தில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதை இவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். அதில் இவர் வேலைவாய்ப்பு, சுயதொழில், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவி போன்ற பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதி செய்த உதவி:

இந்நிலையில் தற்போதுவிஜய் சேதுபதி அவர்கள் காமெடி நடிகர் தெனாலி மகனுக்கும் கல்வி உதவி செய்துள்ளார். நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் நடித்தவர் தெனாலி. இவருடைய மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி படுத்து வருகிறார். நடிகர் தெனாலி தனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்து சென்று நிலைமையை கூறியுள்ளார்.

நன்றி தெரிவித்த தெனாலி:

உடனடியாக, நடிகர் தெனாலியின் மகனுக்காக 76 ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை நடிகர் விஜய் சேதுபதி உருவாக்கியுள்ளார். அதற்கு தெனாலி, என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயரும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை நானும் எனது மகனும் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டோம் என விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி செய்த உதவி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி குறித்து:

தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் கூட ஹிட் அடித்து விடுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த படம் ‘மகாராஜா’. இது இவரின் 50 ஆவது படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

மகாராஜா வெற்றி:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் சூரிவுடன் இணைந்து ‘விடுதலை 2’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் விலகிய நிலையில், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 8 சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement