அல்லு அர்ஜுனுக்கு வில்லனான விஜய் சேதுபதி – ஜோடியாக தேசிய விருது நடிகை. எந்த படம் தெரியுமா?

0
434
vjs
- Advertisement -

புஸ்பா 2 படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

புஸ்பா படம்:

அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ மற்றும் ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் எல்லோரும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இரண்டு பாகமாக உருவாகி இருக்கிறது.

புஸ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி:

மேலும், புஸ்பா 2 படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் புஸ்பா 2 படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது புஸ்பா 2 பாகத்திற்கான பணிகள் நடைபெறுகிறது. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், அவருக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியா மணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இந்த படம் 2023ஆம் ஆண்டும் 10 மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு ‘புஷ்பா2’ல் பகத் பாசில் & விஜய் சேதுபதிக்கு முக்கிய இடமுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் படம்:

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement